டிரான்ஸ் பசுபிக் கூட்டணி வர்த்தக உடன்படிக்கைக்காக மேலும் பணியாற்ற வேண்டும்!! ரூடோ

Report
7Shares

டிரான்ஸ் பசுபிக் கூட்டணி வர்த்தக உடன்படிக்கைக்காக மேலதிகமாக பணியாற்ற வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பசுபிக் கூட்டணி வர்த்தக உடன்படிக்கையில் அமெரிக்க இன்றி, முன்னோக்கி செல்வதற்கு 11 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

கனடா மற்றும் கனேடிய மக்களுக்கான சிறந்த ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. அதற்காக மேலதிகமாக பணியாற்றவேண்டி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் டிரான்ஸ் பசுபிக் கூட்டணி வர்த்தக உடன்படிக்கையை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

674 total views