28 வருடங்களின் பின்னர் பிடிபட்ட, 190 கிலோகிராம் நிறையுடைய வேலா மீன்

Report
50Shares

மீனவர்கள் இருவர் சிறு தோணியில் கடலுக்குச் சென்ற வேளையிலே, இந்த அரிய வகை மீன் பிடிபட்டுள்ளது.

அப்பகுதியில் 28 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு மீன் பிடிபட்டுள்ளதெனவும், மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனை அப்பகுதி மக்கள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

'வேலா' என்றழைக்கப்படும் இந்த மீனினம், ஐந்தடி நீளத்தையும் மூன்றரையடி அகலத்தையும் கொண்டுள்ளது.

190 கிலோகிராம் நிறையுடைய இந்த வேலா மீன், 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2488 total views