மணிப்பூரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

Report
13Shares

மணிப்பூரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் IED வகை சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதியன்று IED வகையை சேர்ந்த குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்ததோடு, ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டார். அதேபோல ஜூன் 30-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை சந்தல் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும்போது, IED வகையை சேர்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

885 total views