தொடரூந்து சேவைகளின் வலைப்பின்னலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்

Report
13Shares

இலங்கையின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு தொடரூந்து சேவைகளின் வலைப்பின்னலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொறியியலாளர்கள், போக்குவரத்துதுறை நிபுணர்கள் மற்றும் கல்விமான்களை கொண்ட குழு என்பன கடந்த வாரம் இந்த கோரிக்கையினை அரசாங்கத்திடம் விடுத்துள்ளன.

தற்போது இலங்கை எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசல்களை சமாளிப்பதற்கு தொடரூந்து சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுகதி நெடுஞ்சாலை நிர்மானப்பணிகளை போன்று தொடரூந்து சேவைகளை மேம்படுத்தலும் போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தொடரூந்து சேவையின் மூலம் மலிவானதும் சிறந்ததுமான சேவையை பெறமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1072 total views