இந்தப் பெண்ணின் பரிதாப நிலை

Report
278Shares

ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொண்டுப் பணியாளரான பிரித்தானிய பெண்ணை விடுதலை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவருடைய கணவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானிய மற்றும் ஈரானிய குடியுரிமையுடைய நாஜினின் சஹாரி-ரட்கிளிஃப் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரான் சென்றிருந்த நிலையில் ஆட்சிக் கவிழ்பை ஏற்படுத்த முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவராக ரிச்சார்ட் ரட்கிளிஃப் தனது மனைவியின் இராஜதந்திர பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சனை சந்திக்கவும் அவருடன் ஈரான் செல்லவும் விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

சஹாரி-ரட்கிளிஃப் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இவ்வாறிருக்க கடந்த முதலாம் திகதி பத்திரிகையாளர்கள் முன்பாக பேசிய ஜோன்சன் சில எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகின்றது. ஜோன்சனின் கருத்துக்கள் சஹாரி-ரட்கிளிஃப்புக்கு எதிரான ஆதாரங்கள் என்று மேற்கோளிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சஹாரி-ரட்கிளிஃப்பின் சிறைத்தண்டனை மேலும் நீடிக்கப்படலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் தனது மனைவியின் விடுதலைக்கு பிரித்தானிய அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரிச்சார்ட் ரட்கிளிஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.

10286 total views