டிரம்பின் நகர்வுக்கு, அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு

Report
24Shares

டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை நகர்த்துவதற்கு திங்கள்கிழமை கையெழுத்திடுவதற்கு இருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் இன்னும் கையெழுத்திடவில்லை.

இந்நிலையில் சர்வதேச எதிர்வினைகள் வெளியாகியுள்ளன

அரபு ஒன்றிய நாடுகள்: "பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தான நடவடிக்கை என்று அரபு ஒன்றிய நாடுகளின் தலைவர் அஹமத் அபூல் கெய்ட் தெரிவித்திருக்கிறார்.

சௌதி அரேபியா: இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் இறுதி தீர்வு ஏற்படும் முன்னால் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை அமைதி முயற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாலத்தீனம்: அமெரிக்காவின் இத்தகைய முடிவு அமைதி முயற்சியை அழித்துவிடும் என்று கூறி உலக நாடுகளின் தலைவர்கள் இதில் தலையிட வேண்டும் என்று பாலத்தீனத்தின் அதிபர் முகமத் அப்பாஸ் கோரியுள்ளார்.

ஜோர்டன்: ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய புனித இடங்களின் பாதுகாப்பாளராக இருக்கும் ஜோர்டன், மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

1320 total views