மீண்டும் களமிறங்கும் பொன்சேகா! – கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை?

Report
35Shares

மஹிந்த தரப்பு, சமகால அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனரா என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கிய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவாரானால் தான் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தக் கருத்து கோட்டாபய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படப்போகின்றாரா? அல்லது அரசியலில் பிரவேசிக்கப் போகின்றாரா? போன்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேபோன்று, மஹிந்த தரப்பினர் தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினாலும் அவர்களின் பிரதான இலக்கு பிரதமர் ரணிலை குறிவைத்தே நகர்த்தப்படுகின்றது. இந்த இடத்தில் ஜனாதிபதி சுதந்திரக்கட்சி என்ற காரணத்தினால் அவர் மீதான சாடல் மறைமுகமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது என அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைய சூழலில் பொன்சேகாவின் கருத்துக்கு அமைய கோட்டாபய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மற்றைய பக்கம் அது ரணிலுக்கு எதிரானதாகவே அமையும் என்பது தற்போதைய அரசியல் சூழல் வெளிப்படையாக காட்டுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

குறிப்பாக பொன்சேகா யுத்த வெற்றி வீரராக கருதப்பட்டாலும், கடந்த காலத்தில் அவர் மஹிந்த தரப்பின் பிடியில் சிக்கி சிறைவாசமும் அனுபவித்தவர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதமராலேயே அவர் காப்பாற்றப்பட்டு பதவியளிக்கப்பட்டுள்ளார் என்பது அறிந்த விடயம்.

கடந்தகாலத்தில் இடம்பெற்ற போர் தொடர்பான விடயங்களை முற்றிலுமாக அறிந்த ஒருவராக காணப்படுபவர் பொன்சேகா, இதனால் மஹிந்த அல்லது கோட்டாபய தனக்கு எதிராக செயற்படுமிடத்தில் பொன்சேகாவை முன்னிறுத்தும் திட்டத்திற்காகவே பிரதமர் பொன்சேகாவை தன்பக்கம் அமர்த்தியுள்ளார் என்பது அரசியல் புத்திஜுவிகள் தெரிவித்துள்ள கருத்து.

அதன்படி தற்போதைய நிலையில் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் நடைபெறுமாயின் அவரை முடக்கும் செயற்பாடுகளை பிரதமர், பொன்சேகா தரப்பினால் மேற்கொள்ளப்படும் என்பதே பொன்சேகாவின் கருத்தின் உள்ளர்த்தமாக காணப்படுவதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்தகாலங்களில் மஹிந்த கோட்டாபய மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்திவந்த பொன்சேகா நீண்ட நாள் அமைதியின் பின்னர் மீண்டும் கோட்டாபயவிற்கு எதிராக கருத்துகளை முன்வைத்திருப்பது தற்போதைய அரசியல் சூழலில் கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1711 total views