கொக்காவிலில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் பலி

Report
17Shares

யாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரஊர்தி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பழைய முறிகண்டி, 18ஆம் மைல்கல் பகுதியில் நேற்றிரவு 8.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதில், ஹையேஸ் வாகனம் முற்றாக உருக்குலைந்து போனதுடன், அதில் பயணம் செய்த நான்கு பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்தவர்கள் இளைஞர்கள் என்றும், வடமராட்சி- நெல்லியடியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1358 total views