சுவிஸில் கொல்லபட்ட இலங்கை இளைஞனின் விபரம் வெளியானது!!

Report

சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன்கிழமை 20 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அந்த வகையில், மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (20) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவர், சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே, அவர் கடந்த புதன்கிழமை (9) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

4030 total views