நன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ

Report

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களின் மூலமாக அவர் இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.

எனினும், இதுவரையில் உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை மக்கள் ஈட்டிக் கொடுத்துள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1688 total views