மஹிந்த மீண்டும் அதிகாரத்தில்!!!

Report

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எம்மை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் தனது உத்தியோகபூர்வ டுவிற்றர் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹம்பாந்தோட்டை உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணமாகின்றனர். மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும், மக்கள் தற்போது மாற்றத்தினையே எதிர்பார்த்துள்ளதாகவும் நாமல் குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலவரப்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின்படி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்போது வரையிலும் உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3353 total views