மனிதநேயம் சாகவில்லை என்பதை நிருபிக்கும் உண்மை சம்பவம்!

Report
65Shares

தென்மேற்கு சீனாவில் மிகவும் பரபரப்பான வீதியில், வீதியை கடக்க முடியாமல் தள்ளாடும் முதியவர் ஒருவரை பலரும் கண்டும் காணாததைப் போல் செல்கின்றனர். போக்குவரத்து சமிக்ஞை மாறியதும், ஒரு சில வாகனங்கள் முதியவருக்காக காத்துக் கொண்டிருக்க சில வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இத்தகைய மனிதர்களுக்கு மத்தியில் மனிதாபிமானத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் செயற்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த முதியவரை தனது முதுகில் சுமந்தவாறு வீதியை கடக்க பொலிஸ் அதிகாரியொருவர் உதவுகிறார்.

போக்குவரத்து கண்காணிப்பு கமராவில் பதிவாகிய இந்த சம்பவம் மாநில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளது.

2464 total views