சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சி

Report
56Shares

வரலாற்றில் முதல் முறையாக – அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி, மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 160.0069 ரூபாவாக வரையறுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி156.9808 ரூபாவாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு, முதல் முறையாக, 160 ரூபாவுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி தொடரும் என்றும், ஆண்டு இறுதியில் 162 ரூபா தொடக்கம், 163 ரூபா வரை வீழ்ச்சியடையலாம் என்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்திருக்கின்றன.

2166 total views