கனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்!

Report
261Shares

தேர்தலுக்கு முன்பு பல சர்ச்சைகளுக்கும், தமிழ் மக்களின் விமர்சனங்களுக்கும் ஆளான நிலையில், Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கனடிய இளைய சமூகத்தினர் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். 28 வயது நிரம்பிய கனடிய பட்டதாரியான இவர், கனடிய முன்னணி வங்கி ஒன்றில் நிதித்துறையில் பணிபுரிந்து வந்தார்.

சிறு வயதிலிருந்தே கனடிய சூழலில் கல்வி கற்று வளர்ந்து வரும் இவர், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் சிறந்த ஆளுமை பெற்றவர்.

தன்னை ஈழ உணர்வாளனென்று அடையாளப்படுத்தி வந்த நிலையில், ட்விட்டர் பதிவால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார்.

தற்போது அனைத்தையும் தாண்டி வந்து, Scarborough Rouge Park தொகுதியில் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு தமிழ் வேட்பாளரான சுமி சன்னையும், NDP சார்பில் போட்டியிட்ட பெலிசா சாமுவெல்-யும் தோற்கடித்து பெரும்பாண்மையான வாக்குகளை பெற்றுள்ளார்.

9320 total views