பாப்பரசருக்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அளித்த இன்ப பரிசு!

Report
23Shares

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் அணிந்து கொள்ளும் ஆடையொன்று பாப்பரசருக்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு அவரிடம் இன்று வழங்கப்பட்டது.

ஒரே காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (ISS) வசித்துவந்த ஆராய்ச்சியாளர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டபோது அவருக்கு இந்த ஆடை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரண விண்வெளி நிலைய வீரர்களிடமிருந்து பாப்பரசரை வேறுபடுத்தும் வகையில் அந்த ஆடையில் பாப்பரசருக்கான வெள்ளை மேலாடையும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆடையின் கைப்பகுதியில் பாப்பரசரின் தாய்நாடான அர்ஜென்டீனாவின் தேசிய கொடியும் ‘Jorge Bergoglio’ எனும் அவருடைய இயற்பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த ஆடை பாப்பரசருக்காகவே தனிப்பட்டமுறையில் தயாரிக்கப்பட்டது என இத்தாலியைச் சேர்ந்த விண்வெளி வீரர் பாலோ நெஸ்போலி தெரிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்த பாப்பரசர், “அப்படியென்றால் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு நான் பயணம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள்” என வேடிக்கையாகப் பேசினார்.

இந்தக் கலந்துரையாடலில் விண்வெளி வீரர்களான பாலோ நெஸ்போலி 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ரஷ்யர் ஆகியோரின் குடும்பத்தினர் பாப்பரசரோடு தமது கருத்துக்களை பரிமாறியதோடு ஆசியும் பெற்றுக் கொண்டனர்.

1312 total views