ரணிலும் ,மைத்திரியும் பேசினால் முரண்பாடு முடிவுக்கு வரும்

Report
3Shares

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடை­யில் அண்­மை­யில் ஏற்­பட்ட மோதல்­கள், இரண்­டரை மணி­நே­ரப் பேச்­சுக்­களை அடுத்து, சமா­தா­ன­மான முறை­யில் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு ஆங்­கில ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வாரம், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை தொடுத்­தி­ருந்­தார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு பஜெட் வீதி­யில் உள்ள தனது வதி­வி­டத்­தில் தலைமை அமைச்­ச­ரு­டன் அவர் இரண்­டரை மணி­நே­ரம் பேச்­சுக்­களை நடத்­தி­னார்.

கூட்டு அர­சின் பங்­கா­ளி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யி­லான உற­வு­க­ளில் எரிச்­ச­லூட்­டும் வகை­யி­லான தொடர் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக இந்­தச் சந்­திப்­பின் போது கவ­னம் செலுத்­தப்­பட்­டது.இதன் போது குறைந்­த­பட்­சம், பிர­தா­ன­மான பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­பட்­டுள்­ளன. கூட்டு அரசு முழுப் பத­விக்­கா­ல­மும் தொடர வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த மகிந்த சம­ர­சிங்க, சரத் அமு­னு­கம, மகிந்த அம­ர­வீர, துமிந்த திச­நா­யக்க ஆகிய நான்கு அமைச்­சர்­களே இந்­தச் சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை அடுத்து ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தி­லும் இந்த அமைச்­சர்­கள் முக்­கிய பங்­காற்­றி­யி­ருந்­த­னர்.

இவர்­கள், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக்­கிய அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, கபீர் காசிம் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துப் பேசி­யதை அடுத்து, செவ்­வாய்க்­கி­ழமை இரவு தலைமை அமைச்­ச­ரை­யும், அரச தலை­வ­ரை­யும் சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யி­லான பேச்­சுக்­க­ளின் போது, அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை துரி­த­மாக முன்­னெ­டுப்­பது குறித்­தும், 2015 ஜன­வரி தேர்­த­லின் போது மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்­பது குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஊட­க­வி­ய­லா­ளர்­கள் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை, கீத் நொயார் கடத்­தல், பிர­தீப் எக்­னெ­லி­கொட கடத்­தல் உள்­ளிட்ட வழக்­கு­கள் தொடர்­பா­க­வும் பேசப்­பட்­டது. இந்த வழக்­கு­க­ளின் விசா­ர­ணை­களை இந்த ஆண்­டுக்­குள் நிறைவு செய்ய வேண்­டும் என்­றும், அதனை பொலிஸ்­துறை உறுதி செய்ய வேண்­டும் என்­றும் முடிவு செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து தனது உத­வி­யா­ளர்­கள் மூலம், பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­த­ரவை, உட­ன­டி­யாக அந்­தக் கூட்­டத்­துக்கு வரு­மாறு அரச தலை­வர் அழைத்து இதற்­கான உத்­த­ர­வு­களை வழங்­கி­னார் என்­றும் அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.

857 total views