இந்து விவகார பிரதி அமைச்சுப்பதவி காதர் மஸ்தானுக்கு

Report
20Shares

காதர் மஸ்தானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள இந்து விவகார பிரதி அமைச்சுப்பதவி தொடர்பில் பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்தநாட்டில் பௌத்த மதத்துக்கு அடுத்தபடியாக இந்துக்களே அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையிலேயே முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனால் இன்று அவருக்கு இந்து சமய விவகார அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதியின் அறியாமையின் செயற்பாடா என இந்துக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.ஒரு முஸ்லிம் அரசியல்வாதியை எவ்வாறு இந்து சமய விவகார பிரதி அமைச்சராக நியமிக்கமுடியுமெனவும் அரசாங்கத்தில் இந்தப் பதவியை வழங்க வேறொருவரும் கிடைக்கவில்லையா எனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களே விசனம் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பெருமளவு இந்துக்கோவில்கள் அழிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விபரங்கள் அத்துறை சார்ந்தவர்களுக்கே தெரியவரும். ஆனால் முஸ்லிம் மதத்தவர் ஒருவருக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டமையை ஏற்றுக்கொள்முடியாது என இந்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

1581 total views