இலங்கையில் திருமணமான இரண்டே நாளில் மணமகனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் மணப்பெண்

Report
88Shares

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட 19 வயதுடைய இளைஞன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தறை – வெலிகம – ஹேனவல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

வெலிகம – கப்பரதொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவத்தை அறிந்த மனைவி கதறி அழும் காட்சியைக் கண்டு பிரதே மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4029 total views