பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் விஜயகலா

Report
57Shares

அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சரிடம் சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தெற்கு அரசியல்வாதிகள் பலரும் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் தனது பதவி விலகல் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

2424 total views