தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்டும் பணியில் முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு

Report
124Shares

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு 12 கால்பந்து விளையாட்டு இளம் வீரர்களும் அவர்களது பயிற்சியாளரும் டிரெக்கிங் சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கே கனமழை பெய்தது. இதனால் அந்த 13 பேருக் குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்ததால் குகை பகுதியில் வெள்ள நீர் புகுந்தது.

தொடர்ந்து பருவமழை தீவிரமடைந்த தொடங்கியதை அடுத்து, அவர்களால் குகையை விட்டு வெளியேற முடியவில்லை. மேலும் குகைப்பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.சுமார் 10 கி.மீ நீளம் கொண்ட இந்த குகை தாம் லுவாங் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு சிக்கிகொண்ட கால்பந்து வீரர்கள் அனைவரும் 11 வயது முதல் 16 வயதுடைய சிறுவர்களாக உள்ளார்கள்.

இந்நிலையில் இவர்களை பற்றி தகவல் எதுவும் தெரியததால் கால்பந்து அணி நிர்வாகம், தாய்லாந்து நாட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தது. அதை தொடர்ந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை துவங்கப்பட்டது.

அவர்கள் மாயமாகி 9 நாட்கள் ஆன நிலையில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற மீட்பு பணியில், காணாமல் போன கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 12 பேர் தாம் லுவாங் குகைக்குள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. ஆனால் குகை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

தவிர, குகைக்குள் சிக்கியிருக்கும் 13 பேருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் அவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான உணவை வழங்க தாய்லாந்து ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர், குகையில் போதிய காற்று கிடைக்காததால் மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மீட்பு குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், தாம் லுவாங் குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி மேலும் துரிதப்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 1000-க்கும் மேற்பட்ட தாய்லாந்து ராணுவத்தினருடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினரும் இதற்கான பணியில் கைக்கோர்த்துள்ளனர்.

4435 total views