தம்பதி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் குறித்து விசாரணை

Report
28Shares

பிரித்தானியாவில் ரஸ்ய முன்னாள் உளவு அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் போன்று மேலும் ஒரு தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை ரேம்பித்துள்ளனர்.

சாலிஸ்பரி நகரை அடுத்த அமேஸ்பரி கிராமத்தில் 44 வயதான டோன் ஸ்டுர்கெஸ் ( Dawn Sturgess ) மற்றும் 45 வயதான சார்லி ரவுலி (Charlie Rowley ) என்ற தம்பதி மீது சில நாட்களுக்கு முன்னர் இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ; அவர்களது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரஸ்ய முன்னாள் உளவு அதிகாரி; மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நோவிசாக் என்ற இரசாயனமே இந்த தம்பதி மீதான தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரசாயனமானது ரஸ்ய ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது என்கின்ற நிலையில் தீவிரவாத தடுப்பு பிரிவின் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

1629 total views