அம்பாறையில் பாடசாலை மாணவர்கள் நால்வருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை

Report
25Shares

அம்பாறை தமன, எக்கல்ஓயாவிற்கு சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து பாடசாலை சுற்றுலா சென்றவர்கள் இன்று காலை எக்கல்ஓயாவில் தோணியொன்றில் பயணித்தபோது, இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோணியில் 9 பேர் பயணித்ததுடன், ஏனைய ஐவரும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர் ஒருவர் மற்றும் பாதுகாவலரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

1881 total views