புதுக் கூட்டணியுடன் விஜயகலா புதிய கட்சி?

Report
49Shares

விடுதலைப் புலிகள் குறித்த கருத்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து புதிய கட்சி அமைக்கவுள்ளதாக, வடக்கு வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் தனது பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு சென்று குடியேறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய அவர் எதிர்வரும் வாரமளவில் பிரித்தானியாவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற அவரது கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

விஜயகலாவின் சர்ச்சை கருத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

1897 total views