ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் புதிய யோசனை முன்வைக்கப்படும் - ஜனாதிபதி

Report
7Shares

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு தீர்வுகள் அடங்கிய யோசனை, தம்மால் ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 25ம் திகதி இந்த யோசனை ஐக்கிய நாடுகள் பொதுசபையில் முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்தவித பலவீனமும் ஏற்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது சீர்த்திருத்துவதா என்பன தொடர்பில் தீர்வு ஒன்று எட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விஷேட காவற்துறை குழுவொன்று விசாரணை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

480 total views