ஹோட்டல் ஒன்றில் யுவதிகள் கைது..!!

Report
14Shares

கொள்ளுபிடியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மசாஜ் தொழில் ஈடுபட்டு வந்துள்ள தாய்லாந்தினை சேர்ந்த 14 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த யுவதிகளில் அதிகமானவர்கள் சுற்றுலா வீசாவில் உள்நாட்டிற்கு வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் எம் ஜீ காரியவசம் தெரவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இளம் வயதினையுடயவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

628 total views