கடன் பொறி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த சிறிலங்கா பிரதமருக்கு சீனா வரவேற்பு

Report
10Shares

சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.

பீஜிங்கில் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஜெங் சுவாங்,

“ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வரவேற்புக்குரியது.

சிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெற்று விட்டது என்ற ‘பெயருக்கு’ இது ஒரு வலுவான மறுப்பாகும்.

சிறிலங்காவுக்கான சீனாவின் உதவி, ஒருபோதும் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையிலானது அல்ல.

சிறிலங்காவுக்கான நிதி மற்றும் முதலீட்டில் எந்தவொரு அரசியல் சுய ஆர்வத்தையும் சீனா கொண்டிருக்கவில்லை.

அணை மற்றும் பாதை வரம்பின் கீழான, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, தனியே இரண்டு நாடுகளின் மக்களுக்கும் நன்மையளிப்பது மாத்திரமல்ல,

பிராந்திய பொருளாதார அபிவிருத்தி மற்றும் இணைந்த செயற்பாட்டுக்கும் பங்களிப்பதுமாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

571 total views