போலி கடவுச்சீட்டில் ரோம் செல்ல முற்பட்டவர் இலங்கையில் கைது

Report

ஸ்பெய்ன் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டு ஒன்றின் மூலம் இலங்​கை ஊடாக ரோம் நோக்கி புறப்பட முற்பட்ட ஈரான் நட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஈரான் பிரஜை டோஹாவில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது பரிசொதனை செய்யப்பட்ட அவர் ஸ்பெய்ன் நாட்டுப் பிரஜை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் போது அவர் போலி கடவுச்சீட்டு மூலம் ரோம் நோக்கி புறப்பட வந்ததமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த நபர் இலங்கைக்கு வந்த கடவுச்சீட்டின் முலமே மீண்டும் டோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

868 total views