அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க நாமும் அணுவாயுத தயாரிப்பை முன்னெடுப்போம்

Report

அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை மீறி அணுவாயுதங்களை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபடுமானால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் அணுவாயுதங்களை தயார் செய்வோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமிடையே அணுவாயுத தடுப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி இரு நாடுகளும் குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவதற்கும், ஏற்கனவே தயாரித்த பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து பெரும்பானலான அணுவாயுதங்கள் இரு தரப்புக்களிலுமிருந்து அழிக்கப்பட்துடன். அணுவாயுத தயாரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டது.

இந் நிலையில் ரஷ்யாவானது குறித்த உடன்படிக்கையை மீறி செயற்பட்டு வருவதாக அமெரிக்க குறிப்பிட்டு, அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளது.

இதற்கு பதிலளித்த புடின்,

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை எம் மீது சுமத்துகின்றனர்.

தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.

அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் பதிலுக்கு அணுவாயுதங்களை தயாரிக்க சித்தமாகவுள்ளோம்.

ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதற்காகவே தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்றார்.

4410 total views