பிலிப்பைன்ஸிற்கு பயணமானார் ஜனாதிபதி

Report

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு பயணமாகியுள்ளார்.

ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டே அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) பயணமாகியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தியோபூர்வமாக வரவேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பேது இருநாட்டு தலைவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின்போது அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

877 total views