ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை

Report

ரொறன்ரோ பெரும்பாகத்தில் இன்று முற்பகல் வேளையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் இதனால் மரக்கிளைகள் முறிந்து வீழந்து மின் வினியோகத் தடை ஏற்படக்கூடும் என்றும் அத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

ஒன்ராறியோவின் அனேகமான தென் பிராந்தியங்களுக்காக சுற்றுச்சூழல் திணைக்களம் விடுக்கப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு திசையில் இந்த காற்று வீசக்கூடும் எனவும், சில இடங்களில் அதன் வேகம் மணிக்கு 90 கிலோமீற்றர் வரையிலும் செல்லக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலையில் இருந்து காணப்படும் இந்த காற்றின் வேகம், பிற்பகலின் பின்னர் படிப்படியாக குறைவடைந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10147 total views