ஒரு வார காலப்பகுதியினுள் முற்றாக விடுவிக்கப்படும் - அமெரிக்க

Report

ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகள் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் முற்றாக விடுவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நாடுகளிலும் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நோக்கில் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு படையணியினர் வான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார்.

ஆகவே, சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்பினரை மீளப்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அமெரிக்க பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் பதவி விலகல் மற்றும் குடியரசு கட்சி மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளின் எதிர்ப்பை அடுத்து டொனால்ட் ட்ரம்ப் தனது முடிவை தாமதப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று வொஷிங்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் இரு நாடுகளிலும் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

2007 total views