மதுஷுடன் முக்கிய அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் தொடர்பு

Report

மாகந்துர மதுஷ் உட்பட அவரது சகாக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் இராஜதந்திர மட்டத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், மதுஷுடன் தொடர்புளை வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் குறித்து பாதுகாப்பு சபையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த மாக்கந்துர மதுஷ் உட்பட அவரது சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதணையில் 31 பேர் கொக்கேயின் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த 31 பேரும் டுபாய் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மறுபுறம் மாகந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட 8 பேரை டுபாய் பொலிசார் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்பகளும் உள்ளடங்குகின்றனர்.

1268 total views