ஜேர்மன் பெண் யாழில் கைது

Report

சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண்ணொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்த குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை விசாரணை செய்ததுடன், அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன்போது அவரிடமிருந்து சில இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1114 total views