மலேசியாவில் இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான குடியேறிகள் கைது

Report

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 166 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிசோதிக்கப்பட்ட 555 குடியேறிகளில் 166 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் செரி மஸ்லான் லசிம் தெரிவித்திருக்கிறார்.

இத்தேடுதல் வேட்டையில் 18 இந்தியர்கள், 55 மியான்மரிகள், 45 வங்கதேசிகள், இந்தோனேசியாவைச் சேர்ந்த 17 பேர், 9 நேபாளிகள், 4 பாகிஸ்தானியர், பிலிப்பைன்சைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 17 ஆப்பிரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“முறையான ஆவணங்களின்றி மலேசியாவுக்குள் நுழைந்ததன் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளனர்,” எனக் கூறியுள்ள காவல்துறை தலைவர் குற்ற எண்ணிக்கையை குறைப்பதற்காக சட்டவிரோத குடியேறிகள் பிரச்னையை துடைத்தெறிவதற்கான தேடுதல் நடவடிக்கை தொடரும் எனக் கூறியுள்ளார்

1107 total views