செம்மஞ்சள் எச்சரிக்கை..! வெள்ளத்தில் மிதக்கும் இரு மாவட்டங்கள்

Report

இன்று சனிக்கிழமை இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

les Landes (40) மற்றும் les Pyrénées-Atlantiques (64) ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Météo-France மேலும் தெரிவிக்கையில் இன்று காலையில் இருந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார தடை, வீதிகள் முடக்கம் போன்றன மிக சாதரணமாக இடம்பெறும் எனவும், பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இந்த எச்சரிக்கை தொடரும் எனவும், இரு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

1505 total views