இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் மீண்டும் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஒன்று கூடினர்.
ஒன்றோடு மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்து ஒரு வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதனை கொண்டாடும் வகையில் இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
200 வரையான மஞ்சள் மேலங்கி போராளிகள் Les Halles பகுதியில் ஒன்று கூடினர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பத்துக்கும் மேற்பட்ட மெற்றோ நிலையங்கள் மூடப்பட்டும், போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டும் பலத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக காவல்துறையினர் பல இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மிக குறைந்தவளவான போராளிகள் (நண்பகல் வரை) கலந்துகொண்டிருந்ததால் வன்முறைகளும் குறைந்த அளவே பதிவாகியிருந்தன. நண்பகலின் பின்னர் பரிசுக்குள் 20 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.