நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம்.

Report

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்காக நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த முறை இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 7 மாணவர்கள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இதன்காரணமாகவே அங்கு பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நான்காயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த பரீட்சைக்காக 7 லட்சத்து 17 ஆயிரத்து 8 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

191 total views