கட்டுநாயக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்னை வரவேற்றார் பிரதமர் மஹிந்த

Report
0Shares

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார்.

இன்று மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் சென்று வரவேற்றார். இம்ரான் கானுக்கு செங்கம்கள வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கையை வெளியிடவுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நாளை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

223 total views