மது போதையில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதிய சுவிஸ் இளைஞருக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான உத்தரவு!

Report

சுவிட்சர்லாந்தில் மது போதையில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு ஒருவர் மரணமடைய காரணமான இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் மூன்று போலந்து நாட்டவர்கள் மீது வாகனத்தை மோதவிட்ட சம்பவத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2017 ஆகஸ்டு மாதம் சம்பவம் நடந்த இரவு தொடர்புடைய 26 வயது இளைஞர் தமது வாகனத்தில் வைத்து பாலியல் தொழிலாளி ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த வேளையில், குறித்த இளைஞரின் உறவினர் ஒருவர், வாகனத்துக்கு வெளியே தெருவில் காத்திருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த பாலியல் தொழிலாளியை அனுப்பி விட்டு, இருவரும் தங்கள் வாகனம் அருகே நின்று புகைத்தபடி இருந்துள்ளனர்.

மேலும் இருவரும் தேவைக்கு மதுவும் அருந்தி இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று போலந்து நாட்டவர்கள் இவர்கள் இருவரையும் கிண்டலடித்ததுடன், ஆபாசமாக திட்டியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த இருவரும் தங்களது வாகனத்தை மணிக்கு 60 முதல் 80 வரையான வேகத்தில் செலுத்தி,

குறித்த போலந்து நாட்டவர்களான பாதசாரிகள் மீது மோதியுள்ளனர். இதில் ஒருவர் சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளார்.

இன்னொருவர் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளார். மூன்றாவது நபர் கால் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் சுவிஸ் இளைஞர்கள் இருவரும் தங்களது வாகனத்தில் அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.

தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வாகனத்தை செலுத்தி பாதசாரி ஒருவர் மரணமடைய காரணமான இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1266 total views