சுவிஸ் ஏரியில் மனிதர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டதன் பின்னணி வெளியானது!

Report

சுவிஸ் ஏரி ஒன்றில் இறங்கிய ஆறு நாய்கள் மர்மமான முறையில் பலியானதைத் தொடர்ந்து ஏரிகளில் குளிக்க மனிதர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Neuchâtel ஏரியில் ஆறு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

அவற்றின் மரணத்திற்கு காரணம் சயனோபாக்டீரியம் என்னும் கிருமியால் வெளிப்படுத்தப்படும் நச்சுப்பொருளா என்பதைக் கண்டறியும் முயற்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சயனோபாக்டீரியம் அல்லது நீலப்பச்சைப் பாசி என்று அழைக்கப்படும் அந்த கிருமி ஒருவகை கூழ் போன்ற நச்சுப்பொருளை வெளியேற்றக்கூடியது.

அதை உட்கொண்டால் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முதல் அறிகுறியாக வாந்தி ஏற்பட்ட உடனேயே, மருத்துவரை அணுகுவது நலம் என்கிறார் Neuchâtel பொலிஸ் செய்தி தொடர்பாளர்.

இதற்கிடையில், குறிப்பிட்ட பகுதியில் 8 கிலோமீற்றர் தூரம் வரை மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மொத்த மாகாணத்திலும் ஏரிகளில் குளிக்க மக்களுக்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.

1033 total views