சுவிஸ் விமானிகளுக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை! விமானிகள் அதிருப்தி

Report
0Shares

சுவிஸ் விமான சேவை விமானிகள், பணியில் இருக்கும் போது மாஸ்க் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளமை விமானிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க 1.5மீற்றர் சமூக இடைவெளி கட்டாயம் என சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ள நிலையில், விமானத்தில் விமானிகளின் அறையில் அது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

இதுவே, விமானிகளுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில்,தற்போது சுவிஸ் விமான சேவை நிறுவனம், பயணங்களின்போது விமானிகள் மாஸ்க் அணிவதை தடை செய்துள்ளது.

சமீபத்தில் ஜேர்மானியரான சுவிஸ் விமானி ஒருவர், பிரேசில் நாட்டிற்கு சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, அவருடன் பணியில் இருந்த எஞ்சிய இரு விமானிகளும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இதேவேளை பணியில் இருக்கும் போது விமானிகள் மாஸ்க் அணிவதால், எந்த சிக்கலும் அதனால் ஏற்பட்டுவிடாது என கூறும் விமானிகள், மாஸ்க் அணிய தடை விதித்திருப்பது, சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் அலட்சிய போக்கு எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும் , விமானிகள் மாஸ்க் அணிவதால் இக்கட்டான சூழலில் மதிப்புமிக்க விநாடிகளை அவர்கள் இழக்க நேரிடும் என்பதாலையே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, பறக்கும் விமானத்தில் திடீரென அழுத்தம் குறைந்துவிட்டால் பாதுகாப்பை உறுதிப்படுத்த விமானிகள் சில நொடிகளில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதேவேளை, யாராவது கொரோனா பாதுகாப்பு மாஸ்க் அணிந்திருந்தால் மதிப்புமிக்க விநாடிகளை அவர்கள் இழக்க நேரிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சைகை மொழியாலும் விமானிகள் பேச வேண்டி இருக்கும், மட்டுமின்றி விமானிகள் எப்போதும் வாசனை தொடர்பிலும் கவனமுடன் இருக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இதனாலையே, சுவிஸ் விமான சேவை விமானிகளுக்கு பாதுகாப்பு மாஸ்க் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

189 total views