நடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த மர்ம பொருள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்

Report

லண்டனில் 20 கிலோ எடை கொண்ட பனிக் கட்டி துப்பரவு பணியாளர் மீது விழாமல் அருகில் விழுந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Kew பகுதியில் தெருவை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளரான Amir Khan(39) அங்கிருக்கும் பாதசாரிகள் நடந்து செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று வானத்தில் இருந்து வந்த மர்ம பொருள், சாலையில் விழுந்து நொறுங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த Amir Khan சற்று பின்வாங்கி ஓட முயற்சித்தார்.

இதை கண்ட அருகில் இருந்தவர்களும் உடனடியாக ஓடி வந்து வானத்தை நோக்கி பார்த்தனர்.

ஆனால் அந்த பொருள் வானில் இருந்து வந்து விழவில்லை எனவும் அருகில் Heathrow விமான நிலையம் இருப்பதால், விமானத்தில் இருந்த பனிக்கட்டி கிழே விழுந்துள்ளதாகவும், அது கிழே விழுந்த வேகத்தை வைத்து பார்க்கும் போது 20 கிலோ எடை இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக பனிப் பொழிவின் தாக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

30464 total views