பிரித்தானியா மகாராணியின் பிறந்த நாள் விழாவில் முதல் முறையாக தலைப்பாகை அணிந்த சிப்பாய்: யார் அவர் தெரியுமா?

Report
273Shares

பிரித்தானியா மகாராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழாவின் போது சிப்பாய் ஒருவர் முதல் முறையாக தலைப்பாகை அணிந்திருந்தார்.

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள் விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மற்ற சிப்பாய்கள் கரடி தோலினால் ஆன தொப்பிகளை அணிந்திருந்தபோது அதில் லெஸ்டரைச் சேர்ந்த சரண்ப்ரீத் சிங் லால் என்ற சிப்பாய் மட்டும் தலைப்பாகை அணிந்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாற்றமாக பார்க்கப்படும் என்று தாம் நம்புவதாகவும், பல்வேறு மதங்கள் மற்றும் பின்னணி கொண்டவர்கள் ராணுவத்தில் சேர இந்த நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை பார்க்கும் மக்கள், இதனை ஏற்றுக் கொண்டு வரலாற்றில் ஒரு மாற்றமாக பார்ப்பார்கள்.

இது எனக்கு பெருமையாக உள்ளது. மற்றவர்களும் என்னை நினைத்து பெருமைப்படுவார்கள் என்று தெரியும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த சரண்ப்ரீத் சிங், குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்தது. 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சரண்ப்ரீத் பிரித்தானியா ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9283 total views