லண்டனை பின்னுக்கு தள்ளிய நியூயார்க்! முதலிடம் பிடித்தது

Report

உலகின் மிகப்பெரிய பொருளாதார மையம் எனும் சிறப்பை பெற்றிருந்த லண்டன் நகரம், தற்போது அதனை நியூயார்க்கிடம் இழந்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை பிரித்தானியா எடுத்து வருகிறது.

இதனை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக உலகளவில் பிற நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்த நகரமாக விளங்கிய லண்டன், தற்போது தனது சிறப்பினை இழந்து வருகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று அமைந்துள்ளது. அதாவது, பொருளாதார ரீதியில் சிறப்பிடம் பிடித்துள்ள 100 நகரங்களில் முதலிடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது.

இதில் முதலிடத்தில் இருந்த லண்டன் தற்போது 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்த ஆய்வானது மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

1673 total views