பிரித்தானிய மஹாராணியினால் கௌரவிக்கப்படும் இலங்கையர்

Report
433Shares

பிரித்தானிய மஹாராணியினால் இலங்கையர் ஒருவர் கௌரவிக்கப்பட உள்ளார். சமூகத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையர் ஒருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

பாக்யா விஜேவர்தன என்னும் இலங்கையரே இவ்வாறு கௌரவிக்கப்பட உள்ளார். 18 முதல் 29 வயது வரையிலான இளம் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. பால்நிலை சமத்துவம், உளவியல் ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கியோர், சிறுவர் உதவிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் மக்களின் வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட உள்ளது.

பொதுநலவாய நாடுகளின் 52 உறுப்பு நாடுகளிலிருந்து இந்த விருதிற்கான தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

18529 total views