பிரித்தானியாவில் மரக்கறிகளை பொலித்தீனால் பொதிசெய்வதை நிறுத்த வலியுறுத்து

Report
24Shares

பிரித்தானியாவிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் மரக்கறிகளை பொலித்தீனால் பொதிசெய்து விற்பனை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியக் கடலில் கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் சேர்ந்துள்ளதாக, பிரித்தானிய அரசாங்கமும் சூழலியல் பிரசாரகர்களும் எச்சரித்துள்ளனர்;. இதனையடுத்தே, மரக்கறிகளை பொலித்தீனால் பொதி செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டமாக மொத்த விற்பனை நிலையங்களில் பொலித்தீன் பைகளுக்கு 5 பென்ஸ் அறவிடப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டண அறவீட்டைச் சில்லறை விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

810 total views