காலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்

Report

பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம் மேலும் ஒரு வருடத்துக்கு காலம் தாழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய பிரியும் நிகழ்வு, 2021ம் ஆண்டுடின் இறுதியிலேயே நிகழும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பில் ப்ரெக்ஸிட் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்து தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் மாநாட்டில் இறுதி முடிவு எவையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே குறித்த கால நீடிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அதனை நிராகரிக்கவும் இல்லை என்று அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

7871 total views