இங்கிலாந்தில் குடியேறிகள் பயணித்த லொறி கைப்பற்றப்பட்டது!

Report

27 குடியேறிகள் அடங்கிய லொறி ஒன்றை M6 நெடுஞ்சாலையில் கைப்பற்றியுள்ளதாகவும் லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் M6 நெடுஞ்சாலையின் 15 ஆம் 16 ஆம் சந்திப்புகளுக்கிடையே ஸ்ட்ரட்பேர்ட்ஷயர் பொலிஸாரால் இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக பல மணிநேரங்களுக்கு நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும் தற்போது மறுபடியும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறியத்தரப்பட்டுள்ளது.

லொறியிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து குடியேறிகளை மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

745 total views