பிரித்தானியாவில் தரையிறங்க திணறிய விமானங்கள்!

Report

பிரித்தானியாவில் பலத்த காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் பெரும் நெருக்கடி நிலை தோன்றியது.

பேர்மிங்ஹாம் விமான நிலையத்திற்கு நேற்று விமானங்கள் தரையிறங்க முற்பட்ட போது, காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாகவும், தரைக்காற்றின் வேகம் மிக அதிகமாகவும் வீசியது.

இதனால் தரையிறங்க முயன்ற விமானங்கள், தரைக்காற்றின் வேகத்தில் மீண்டும் மேலே உயர்த்தப்பட்டன.

இதன் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் பெரும் சிரமம் நீடித்தது. இந்த நிலையில் காற்றின் வேகம் குறைந்து வந்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் ‘க்ரொஸ் லான்டிங்’ எனப்படும் பக்கவாட்டு முறையில் தரையிறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மற்ற விமானங்களும் பாதிப்பின்றி தரையிறங்கின.

1224 total views