தெரசா மே பாராளுமன்றத்தில் 2ஆவது முறையாக படு தோல்வி - தேர்தலை நடத்துவதற்கான நேரம் கிட்டியுள்ளது

Report

‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக தெரசா மே கொண்ட வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2ஆவது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் 29ஆம் திகதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2ஆவது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நேரம் கிட்டியுள்ளது: தொழிற்கட்சி

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நேரம் கிட்டியுள்ளதாக பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரதமர் தெரேசா மே-யின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மகத்தான பெரும்பான்மை வாக்குகளுடன் அரசாங்கம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மே-யின் ஒப்பந்தம், முன்மொழிவுகள் என்பவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவில்லை என்பதை தற்போதேனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான முயற்சி தகர்த்தெறியப்பட வேண்டும்.

பிரெக்ஸிற் செயற்பாடுகள் இவ்வாறு இழுபறி நிலையில் காணப்படுகின்றமையால் அதற்கு மாறாக பொதுத் தேர்தலை நடத்தலாம். அதன்மூலம் தங்களது அரசாங்கத்தை பொதுமக்களே தீர்மானித்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

வாக்கெடுப்பு தோல்வியடைந்தமை வருத்தமளிக்கிறது!- பிரதமர் மே

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமை வருத்தமளிப்பதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) தோல்வியடைந்ததையடுத்து, நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையிட்டு நாம் மிகவும் வருந்துகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையுடன் வெளியேறி அரசாங்கத்தை சிறப்பான முறையில் கொண்டு செல்லவே நாம் எதிர்ப்பாத்திருந்தோம். இதுதொடர்பான எனது கடமைகளை நான் கடந்த இரண்டு வாரங்களாக சிறப்பாக மேற்கொண்டிருந்தேன்.

இதுதொடர்பாக நான் இன்னும் உறுதியான நிலைப்பாட்டுடனேயே காணப்படுகிறேன். எவ்வாறாயினும், மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா ஒப்பந்தமில்லாமல் வெளியேற விரும்புகிறதா என்பதை அறிந்துக் கொள்வதற்காக நடைபெறும் வாக்கெடுப்பானது, மிகவும் முக்கியமான ஒன்றாகவே தற்போது நான் கருதுகிறேன்.

எமது நாட்டின் எதிர்க்காலத்திற்கு முக்கியத்துவம் வழங்கி, நாடாளுமன்றின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் நான் எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த கௌரவமான பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, நான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பும் விடுக்கிறேன்.

அத்தோடு, அயர்லாந்து விவகாரம் தொடர்பாக பிரதமராக நான் எனது கடமைகளை உணர்கிறேன் என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்த வரலாற்று முடிவை எடுப்பதற்கு நாடாளுமன்றம் பெரும்பான்மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

15567 total views